Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 2. அல்பகறா    | முன் |   வசனம்87-96 of 286    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
وَ لَقَدۡ اٰتَيۡنَا مُوۡسَى الۡكِتٰبَ وَقَفَّيۡنَا مِنۡۢ بَعۡدِهٖ بِالرُّسُلِ وَاٰتَيۡنَا عِيۡسَى ابۡنَ مَرۡيَمَ الۡبَيِّنٰتِ وَاَيَّدۡنٰهُ بِرُوۡحِ الۡقُدُسِؕ اَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُوۡلٌۢ بِمَا لَا تَهۡوٰٓى اَنۡفُسُكُمُ اسۡتَكۡبَرۡتُمۡۚ فَفَرِيۡقًا كَذَّبۡتُمۡ وَفَرِيۡقًا تَقۡتُلُوۡنَ ﴿2:87﴾ وَقَالُوۡا قُلُوۡبُنَا غُلۡفٌؕ بَل لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيۡلًا مَّا يُؤۡمِنُوۡنَ ﴿2:88﴾ وَلَمَّا جَآءَهُمۡ كِتٰبٌ مِّنۡ عِنۡدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمۡۙ وَكَانُوۡا مِنۡ قَبۡلُ يَسۡتَفۡتِحُوۡنَ عَلَى الَّذِيۡنَ كَفَرُوۡا  ۖۚ فَلَمَّا جَآءَهُمۡ مَّا عَرَفُوۡا کَفَرُوۡا بِهٖ فَلَعۡنَةُ اللّٰهِ عَلَى الۡكٰفِرِيۡنَ  ﴿2:89﴾ بِئۡسَمَا اشۡتَرَوۡا بِهٖۤ اَنۡفُسَهُمۡ اَنۡ يَّڪۡفُرُوۡا بِمَآ اَنۡزَلَ اللّٰهُ بَغۡيًا اَنۡ يُّنَزِّلَ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖ عَلٰى مَنۡ يَّشَآءُ مِنۡ عِبَادِهٖۚ فَبَآءُوۡ بِغَضَبٍ عَلٰى غَضَبٍؕ وَلِلۡكٰفِرِيۡنَ عَذَابٌ مُّهِيۡنٌ  ﴿2:90﴾ وَاِذَا قِيۡلَ لَهُمۡ اٰمِنُوۡا بِمَآ اَنۡزَلَ اللّٰهُ قَالُوۡا نُؤۡمِنُ بِمَآ اُنۡزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُوۡنَ بِمَا وَرَآءَهٗ وَهُوَ الۡحَـقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمۡؕ قُلۡ فَلِمَ تَقۡتُلُوۡنَ اَنۡـــۢبِيَآءَ اللّٰهِ مِنۡ قَبۡلُ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَ ﴿2:91﴾ وَلَقَدۡ جَآءَکُمۡ مُّوۡسٰى بِالۡبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِهٖ وَاَنۡـتُمۡ ظٰلِمُوۡنَ ﴿2:92﴾ وَاِذۡ اَخَذۡنَا مِيۡثَاقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَکُمُ الطُّوۡرَ ؕ خُذُوۡا مَآ اٰتَيۡنٰکُمۡ بِقُوَّةٍ وَّاسۡمَعُوۡا  ؕ قَالُوۡا سَمِعۡنَا وَعَصَيۡنَا  وَاُشۡرِبُوۡا فِىۡ قُلُوۡبِهِمُ الۡعِجۡلَ بِکُفۡرِهِمۡ ؕ قُلۡ بِئۡسَمَا يَاۡمُرُکُمۡ بِهٖۤ اِيۡمَانُكُمۡ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَ ﴿2:93﴾ قُلۡ اِنۡ كَانَتۡ لَـکُمُ الدَّارُ الۡاٰخِرَةُ عِنۡدَ اللّٰهِ خَالِصَةً مِّنۡ دُوۡنِ النَّاسِ فَتَمَنَّوُا الۡمَوۡتَ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِيۡنَ ﴿2:94﴾ وَ لَنۡ يَّتَمَنَّوۡهُ اَبَدًاۢ بِمَا قَدَّمَتۡ اَيۡدِيۡهِمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِالظّٰلِمِيۡنَ ﴿2:95﴾ وَلَتَجِدَنَّهُمۡ اَحۡرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ  ۛۚ وَ مِنَ الَّذِيۡنَ اَشۡرَكُوۡا  ۛۚ يَوَدُّ اَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ اَ لۡفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهٖ مِنَ الۡعَذَابِ اَنۡ يُّعَمَّرَؕ وَاللّٰهُ بَصِيۡرٌۢ بِمَا يَعۡمَلُوۡنَ  ﴿2:96﴾

2:87 மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம். இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். இது என்ன போக்கு? 2:88 “எங்களுடைய இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று அவர்கள் கூறுகின்றனர். இல்லை, அவர்களுடைய அவநம்பிக்கையின் காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான் (என்பதுதான் உண்மை). ஆகவே, மிகச் சொற்பமாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். 2:89 மேலும், அல்லாஹ்விடமிருந்து வேதம் அவர்களிடம் வந்தபோது (அதனுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்?) அதுவோ, அவர்களிடம் இருந்த வேதத்தை உறுதிப்படுத்துகின்றது. மேலும் (அது வருவதற்கு) முன்பு அவர்களே, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியும் உதவியும் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அறிந்துகொண்ட ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அத்தகைய நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! 2:90 எதனைக்கொண்டு அவர்கள் மன ஆறுதல் பெறுகின்றார்களோ அது எத்துணைக் கெட்டது! (அதாவது) அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது தன் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே (இப்போது) அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு. 2:91 “அல்லாஹ் இறக்கியருளியதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “எங்களுக்கு (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு) எது இறக்கி அருளப்பட்டிருக்கிறதோ அதன் மீது மட்டும்தான் நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அதைத் தவிர மற்றதை அவர்கள் நிராகரிக்கின்றார்கள். உண்மையில், அது சத்தியமானதாகவும் (முன்னரே) அவர்களிடம் இருந்த அறிவுரைகளை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது! அவர்களைக் கேளும்: “உங்களுக்கு அருளப்பட்டவற்றின் மீது நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இதற்கு முன் (இஸ்ராயீல் வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை நீங்கள் ஏன் கொலை செய்து கொண்டிருந்தீர்கள்?” 2:92 மேலும், மூஸா உங்களிடம் (எத்துணைத்) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர் (உங்களை விட்டுத் திரும்பிச்) சென்ற உடனேயே நீங்கள் காளைக் கன்றை தெய்வமாக்கிக் கொண்டீர்கள். அந்த அளவுக்கு அக்கிரமக்காரர்களாய் நீங்கள் இருந்தீர்கள். 2:93 பிறகு உங்கள் மீது தூர் மலையை நாம் உயர்த்தி, நாம் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உறுதியான ஒப்பந்தத்தை (சற்று) நினைத்துப் பாருங்கள். “உங்களுக்கு நாம் அருளுகின்ற அறிவுரைகளை வலுவாகக் கடைப்பிடியுங்கள். மேலும் (நம்முடைய கட்டளைக்குச்) செவிசாயுங்கள்” என்று நாம் கூறினோம். அதற்கு உங்கள் முன்னோர்கள் “நாங்கள் செவியேற்றோம்; ஆனால் மாறு செய்வோம்” என்று கூறினார்கள். அவர்களின் அசத்தியப்போக்கு எந்த அளவு முற்றியிருந்ததெனில், அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் காளைக் கன்று வழிபாட்டின் மீது அவர்களின் உள்ளங்கள் மோகம் கொண்டிருந்தன. “நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இழிவான இச்செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகின்ற உங்கள் நம்பிக்கை எத்துணை விசித்திரமானது!” என்று நீர் கூறும். 2:94 அவர்களிடம் நீர் சொல்வீராக: “அல்லாஹ்விடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)” 2:95 தம் கைகளினால் சம்பாதித்துள்ள தீவினைகளின் காரணத்தால், அவர்கள் அதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). மேலும், இந்த அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 2:96 எல்லா மனிதர்களை விடவும் ஏன், இணைவைத்து வணங்குபவர்களை விடவும் இவர்களே வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாய் இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் (எப்படியாவது) ஓராயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆயினும், அவனுடைய நீண்ட ஆயுள், வேதனையிலிருந்து அவனை விலக்கிவிடாதே! அவர்கள் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

  அத்தியாயம் 2. அல்பகறா   |  முன்  |     வசனம் 87-96 of 286    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-7
 8-20
 21-29
 30-39
 40-46
 47-59
 60-61
 62-71
 72-82
 83-86
 87-96
 97-103
 104-112
 113-121
 122-129
 130-141
 142-147
 148-151
 152-163
 164-167
 168-176
 177-182
 183-188
 189-196
 197-210
 211-216
 217-221
 222-228
 229-231
 232-235
 236-242
 243-248
 249-253
 254-257
 258-260
 261-266
 267-273
 274-281
 282-283
 284-286