Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 2. அல்பகறா    | முன் |   வசனம்267-273 of 286    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِنۡ طَيِّبٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّاۤ اَخۡرَجۡنَا لَـكُمۡ مِّنَ الۡاَرۡضِ وَلَا تَيَمَّمُوا الۡخَبِيۡثَ مِنۡهُ تُنۡفِقُوۡنَ وَلَسۡتُمۡ بِاٰخِذِيۡهِ اِلَّاۤ اَنۡ تُغۡمِضُوۡا فِيۡهِؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيۡدٌ ﴿2:267﴾ اَلشَّيۡطٰنُ يَعِدُكُمُ الۡـفَقۡرَ وَيَاۡمُرُكُمۡ بِالۡفَحۡشَآءِ ۚ وَاللّٰهُ يَعِدُكُمۡ مَّغۡفِرَةً مِّنۡهُ وَفَضۡلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيۡمٌۚ  ۙۖ ﴿2:268﴾ يُؤۡتِى الۡحِكۡمَةَ مَنۡ يَّشَآءُ ۚ وَمَنۡ يُّؤۡتَ الۡحِكۡمَةَ فَقَدۡ اُوۡتِىَ خَيۡرًا كَثِيۡرًا ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ ﴿2:269﴾ وَمَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ نَّفَقَةٍ اَوۡ نَذَرۡتُمۡ مِّنۡ نَّذۡرٍ فَاِنَّ اللّٰهَ يَعۡلَمُهٗ ؕ وَمَا لِلظّٰلِمِيۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿2:270﴾ اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَۚ وَاِنۡ تُخۡفُوۡهَا وَ تُؤۡتُوۡهَا الۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٌ لَّكُمۡؕ وَيُكَفِّرُ عَنۡكُمۡ مِّنۡ سَيِّاٰتِكُمۡؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ ﴿2:271﴾ لَيۡسَ عَلَيۡكَ هُدٰٮهُمۡ وَلٰـكِنَّ اللّٰهَ يَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَيۡرٍ فَلِاَنۡفُسِكُمۡؕ وَمَا تُنۡفِقُوۡنَ اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ اللّٰهِؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَيۡرٍ يُّوَفَّ اِلَيۡكُمۡ وَاَنۡـتُمۡ لَا تُظۡلَمُوۡنَ ﴿2:272﴾ لِلۡفُقَرَآءِ الَّذِيۡنَ اُحۡصِرُوۡا فِىۡ سَبِيۡلِ اللّٰهِ لَا يَسۡتَطِيۡعُوۡنَ ضَرۡبًا فِى الۡاَرۡضِ يَحۡسَبُهُمُ الۡجَاهِلُ اَغۡنِيَآءَ مِنَ التَّعَفُّفِۚ تَعۡرِفُهُمۡ بِسِيۡمٰهُمۡۚ لَا يَسۡـــَٔلُوۡنَ النَّاسَ اِلۡحَــافًا ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَيۡرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيۡمٌ ﴿2:273﴾

2:267 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதித்த பொருள்களிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்தவற்றிலிருந்தும் சிறந்தவற்றை (இறை வழியில்) செலவு செய்யுங்கள். அவற்றில் மோசமான பொருள்களைத் (தேர்ந்தெடுத்து) அவனுடைய வழியில் நீங்கள் செலவு செய்ய முற்படாதீர்கள். உண்மையில் அது போன்ற மோசமான பொருள்களை உங்களுக்கு எவரேனும் கொடுத்தால், நீங்கள் அதனை விரும்பமாட்டீர்களே! அல்லது கண்டும் காணாமல்தானே அதனை ஏற்றுக் கொள்வீர்கள்? நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு உள்ளவனும் மாபெரும் புகழுடையோனுமாய் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 2:268 ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்; மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். அல்லாஹ் விசாலமான கொடையாளனும் எல்லாம் அறிந்தவனுமாவான். 2:269 தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள். 2:270 நீங்கள் ஏதேனும் செலவு செய்திருந்தால் அல்லது நீங்கள் ஏதேனும் நேர்ச்சை நேர்ந்திருந்தால் அதனை நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான். மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 2:271 நீங்கள் தர்மங்களை வெளிப்படை யாகச் செய்யின் அதுவும் நல்லதுதான்; நீங்கள் அவற்றை யாருக்கும் தெரியாமல் தேவையுடையோர்க்கு கொடுப்பீர்களாயின் அது இன்னும் உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் இத்தகைய செயல்கள் காரணமாக உங்கள் தீமைகளை அல்லாஹ் அழித்து விடுகின்றான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாய் இருக்கின்றான். 2:272 (நபியே!) அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பு உம்முடையதல்ல. எனினும், தான் நாடுபவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் நீங்கள் எந்த நல்ல பொருளை (இறைவழியில்) செலவு செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாய் இருக்கும். அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்வதில்லையே...! எனவே எந்த நல்ல பொருளை (இறைவழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்; மேலும் நீங்கள் (ஒருபோதும்) அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். 2:273 பூமியில் (தம் தேவைகளுக்காக) ஓடியாடி உழைக்க முடியாத வண்ணம் அல்லாஹ்வின் பாதையில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களான வசதியற்றவர்கள்தாம் உங்கள் தர்மங்களுக்கு மிகவும் உரித்தானவர்கள் ஆவர்! (அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர்களிடமுள்ள தன்னடக்கத்தைக் கண்டு அவர்களை தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள். அவர்களின் முகங்களைப் பார்த்தே அவர்களின் உண்மை நிலையை நீர் அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களோ மக்களிடம் வற்புறுத்திக் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அவர்களுக்காக) நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

  அத்தியாயம் 2. அல்பகறா   |  முன்  |     வசனம் 267-273 of 286    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-7
 8-20
 21-29
 30-39
 40-46
 47-59
 60-61
 62-71
 72-82
 83-86
 87-96
 97-103
 104-112
 113-121
 122-129
 130-141
 142-147
 148-151
 152-163
 164-167
 168-176
 177-182
 183-188
 189-196
 197-210
 211-216
 217-221
 222-228
 229-231
 232-235
 236-242
 243-248
 249-253
 254-257
 258-260
 261-266
 267-273
 274-281
 282-283
 284-286