Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 2. அல்பகறா    | முன் |   வசனம்258-260 of 286    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
اَلَمۡ تَرَ اِلَى الَّذِىۡ حَآجَّ اِبۡرٰهٖمَ فِىۡ رَبِّهٖۤ اَنۡ اٰتٰٮهُ اللّٰهُ الۡمُلۡكَۘ اِذۡ قَالَ اِبۡرٰهٖمُ رَبِّىَ الَّذِىۡ يُحۡىٖ وَيُمِيۡتُۙ قَالَ اَنَا اُحۡىٖ وَاُمِيۡتُؕ قَالَ اِبۡرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاۡتِىۡ بِالشَّمۡسِ مِنَ الۡمَشۡرِقِ فَاۡتِ بِهَا مِنَ الۡمَغۡرِبِ فَبُهِتَ الَّذِىۡ كَفَرَؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَۚ ﴿2:258﴾ اَوۡ كَالَّذِىۡ مَرَّ عَلٰى قَرۡيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوۡشِهَا ۚ قَالَ اَنّٰى يُحۡىٖ هٰذِهِ اللّٰهُ بَعۡدَ مَوۡتِهَا ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ قَالَ كَمۡ لَبِثۡتَؕ قَالَ لَبِثۡتُ يَوۡمًا اَوۡ بَعۡضَ يَوۡمٍؕ قَالَ بَلۡ لَّبِثۡتَ مِائَةَ عَامٍ فَانۡظُرۡ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۚ وَانْظُرۡ اِلٰى حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ وَانْظُرۡ اِلَى الۡعِظَامِ كَيۡفَ نُـنۡشِزُهَا ثُمَّ نَكۡسُوۡهَا لَحۡمًا ؕ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعۡلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ ﴿2:259﴾ وَاِذۡ قَالَ اِبۡرٰهٖمُ رَبِّ اَرِنِىۡ كَيۡفَ تُحۡىِ الۡمَوۡتٰى ؕ قَالَ اَوَلَمۡ تُؤۡمِنۡؕ قَالَ بَلٰى وَلٰـكِنۡ لِّيَطۡمَٮِٕنَّ قَلۡبِىۡؕ قَالَ فَخُذۡ اَرۡبَعَةً مِّنَ الطَّيۡرِ فَصُرۡهُنَّ اِلَيۡكَ ثُمَّ اجۡعَلۡ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنۡهُنَّ جُزۡءًا ثُمَّ ادۡعُهُنَّ يَاۡتِيۡنَكَ سَعۡيًا ؕ وَاعۡلَمۡ اَنَّ اللّٰهَ عَزِيۡزٌ حَكِيۡمٌ ﴿2:260﴾

2:258 இப்ராஹீமுடைய அதிபதி யார் என்பது குறித்து அவருடன் தர்க்கம் புரிந்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரம் வழங்கியிருந்த காரணத்தாலேயே அவன் தர்க்கம் புரிந்தான். “எவன் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றானோ அவனே என்னுடைய அதிபதி!” என இப்ராஹீம் கூறியதற்கு, “நானும் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றேனே!” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம் “அப்படியானால் அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். நீ அதைச் சற்று மேற்கிலிருந்து உதிக்கச் செய்!” என்று கூறினார். (இதைக் கேட்ட மாத்திரத்தில்) சத்தியத்தை மறுத்த அவன் திகைத்துப் போனான். அல்லாஹ் அக்கிரமம் புரிபவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை. 2:259 அல்லது முகடுகள் இடிந்து வீழ்ந்து கிடந்த ஓர் ஊரினைக் கடந்து சென்ற ஒரு மனிதரின் உதாரணத்தை நீர் கவனிக்க வில்லையா? அவர் “(முற்றிலும்) அழிந்து போய்விட்ட இந்த ஊர் மக்களை அல்லாஹ் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறான்?” என வினவினார். அதற்கு அல்லாஹ் அவருடைய உயிரைக் கைப்பற்றி நூறாண்டுகள் அவரை உயிரற்றவராய்க் கிடக்கச் செய்தான்! பின்னர் அவரை உயிர்த்தெழச் செய்து வினவினான்: “நீர் எவ்வளவு காலம் இவ்வாறு கிடந்தீர்?அதற்கு அவர் “ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் நான் இப்படிக் கிடந்திருப்பேன்” என்று கூறினார். அல்லாஹ் கூறினான்: “இல்லை; (இந்நிலையிலேயே) நீர் நூறாண்டுகள் கிடந்தீர்! உம்முடைய உணவையும் பானத்தையும் சற்றுப் பாரும்! அவை சிறிதும் கெட்டுப் போகவில்லை. மேலும் உம்முடைய கழுதையைப் பாரும்! (அதன் எலும்புகள்கூட மக்கிப் போய்விட்டன). உம்மை மக்களுக்கோர் சான்றாக விளங்கச் செய்வதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம். அந்த எலும்புகளை நாம் எவ்வாறு ஒன்று சேர்த்துப் பின்னர் சதையால் அவற்றைப் போர்த்துகிறோம் என்பதைப் பாரும்! இப்படி, உண்மை அவருக்குத் தெளிவானபோது, “திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். 2:260 “என் அதிபதியே! மரித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறிய சந்தர்ப்பத்தையும் நினைவுகூரும். அப்பொழுது இறைவன், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான்: “ஆம்! (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) எனினும் என்னுடைய மனம் அமைதியடையும் பொருட்டே இவ்வாறு கேட்கிறேன்!” என்று அவர் கூறினார். அதற்கு அல்லாஹ், “அப்படியானால் நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை (நன்கு பழக்கி) உம்முடன் இணங்கி இருக்கச் செய்யும். பின்னர் (அவற்றைத் துண்டுகளாக்கி) அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிடும்; பிறகு அவற்றை நீர் கூப்பிடும்! அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும். மேலும் அல்லாஹ், நிச்சயமாக வல்லமை மிக்கோனும் நுண்ணறிவுடையோனுமாயிருக்கின்றான் என்பதை நீர் நன்கு அறிந்து கொள்ளும்” என்று கூறினான்.

  அத்தியாயம் 2. அல்பகறா   |  முன்  |     வசனம் 258-260 of 286    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-7
 8-20
 21-29
 30-39
 40-46
 47-59
 60-61
 62-71
 72-82
 83-86
 87-96
 97-103
 104-112
 113-121
 122-129
 130-141
 142-147
 148-151
 152-163
 164-167
 168-176
 177-182
 183-188
 189-196
 197-210
 211-216
 217-221
 222-228
 229-231
 232-235
 236-242
 243-248
 249-253
 254-257
 258-260
 261-266
 267-273
 274-281
 282-283
 284-286