Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 2. அல்பகறா    | முன் |   வசனம்243-248 of 286    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
اَلَمۡ تَرَ اِلَى الَّذِيۡنَ خَرَجُوۡا مِنۡ دِيَارِهِمۡ وَهُمۡ اُلُوۡفٌ حَذَرَ الۡمَوۡتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوۡتُوۡا ثُمَّ اَحۡيَاھُمۡؕ اِنَّ اللّٰهَ لَذُوۡ فَضۡلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا يَشۡکُرُوۡنَ ﴿2:243﴾ وَقَاتِلُوۡا فِىۡ سَبِيۡلِ اللّٰهِ وَاعۡلَمُوۡٓا اَنَّ اللّٰهَ سَمِيۡعٌ عَلِيۡمٌ  ﴿2:244﴾ مَنۡ ذَا الَّذِىۡ يُقۡرِضُ اللّٰهَ قَرۡضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضۡعَافًا کَثِيۡرَةً  ؕ وَاللّٰهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَ اِلَيۡهِ تُرۡجَعُوۡنَ ﴿2:245﴾ اَلَمۡ تَرَ اِلَى الۡمَلَاِ مِنۡۢ بَنِىۡٓ اِسۡرَآءِيۡلَ مِنۡۢ بَعۡدِ مُوۡسٰىۘ اِذۡ قَالُوۡا لِنَبِىٍّ لَّهُمُ ابۡعَثۡ لَنَا مَلِکًا نُّقَاتِلۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِؕ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ اِنۡ کُتِبَ عَلَيۡکُمُ الۡقِتَالُ اَلَّا تُقَاتِلُوۡا ؕ قَالُوۡا وَمَا لَنَآ اَلَّا نُقَاتِلَ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ وَقَدۡ اُخۡرِجۡنَا مِنۡ دِيَارِنَا وَاَبۡنَآٮِٕنَا ؕ فَلَمَّا کُتِبَ عَلَيۡهِمُ الۡقِتَالُ تَوَلَّوۡا اِلَّا قَلِيۡلًا مِّنۡهُمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِالظّٰلِمِيۡنَ ﴿2:246﴾ وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ اِنَّ اللّٰهَ قَدۡ بَعَثَ لَـکُمۡ طَالُوۡتَ مَلِكًا ؕ قَالُوۡٓا اَنّٰى يَكُوۡنُ لَهُ الۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ اَحَقُّ بِالۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةً مِّنَ الۡمَالِؕ قَالَ اِنَّ اللّٰهَ اصۡطَفٰٮهُ عَلَيۡکُمۡ وَزَادَهٗ بَسۡطَةً فِى الۡعِلۡمِ وَ الۡجِسۡمِؕ وَاللّٰهُ يُؤۡتِىۡ مُلۡکَهٗ مَنۡ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيۡمٌ ﴿2:247﴾ وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ اِنَّ اٰيَةَ مُلۡکِهٖۤ اَنۡ يَّاۡتِيَکُمُ التَّابُوۡتُ فِيۡهِ سَکِيۡنَةٌ مِّنۡ رَّبِّکُمۡ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوۡسٰى وَاٰلُ هٰرُوۡنَ تَحۡمِلُهُ الۡمَلٰٓٮِٕكَةُ ؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيَةً لَّـکُمۡ اِنۡ كُنۡتُمۡ مُّؤۡمِنِيۡنَ ﴿2:248﴾

2:243 மரணத்துக்கு அஞ்சித் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ, ஆயிரக் கணக்கில் இருந்தனர். ‘நீங்கள் மரணமடைந்து விடுங்கள்!” என்று அல்லாஹ் அவர்களிடம் கூறினான். பின்னர் அவர்களை மீண்டும் அவன் உயிர்ப்பித்தான். (உண்மையில்) அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் பாலிப்பவனாக இருக்கின்றான். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. 2:244 (முஸ்லிம்களே!) அல்லாஹ்வின் வழியில் போர் புரியுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும் பேரறிவாளனாகவும் இருக்கின்றான் என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள்! 2:245 அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் உளர்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பல மடங்குகளாக்கி அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ்தான் (செல்வத்தைக்) குறைக்கவும் பெருக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். 2:246 மூஸாவுக்குப் பின்னர் இஸ்ரவேலர்களின் தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றி நீர் சிந்தித்துப் பார்க்கவில்லையா? “அல்லாஹ்வின் வழியில் நாங்கள் போர் புரிவதற்காக எங்களுக்கு ஓர் அரசனை நியமனம் செய்யுங்கள்!” என்று அவர்கள் தம் நபியிடம் கூறியபோது அவர், “போர் உங்கள் மீது விதியாக்கப்படும்போது, நீங்கள் போர் புரியாமல் இருந்து விட்டால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டும், எங்கள் பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டும் இருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போர் புரியாமலிருக்க, எங்களுக்கு என்ன கேடு?” என்று கூறினார்கள். ஆனால் போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டனர்! மேலும், அல்லாஹ் இத்தகைய அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவான். 2:247 அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை, உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றான்” என்று அவர்களிடம் கூறினார். (இதைக் கேட்டதும்) அவர்கள், “எங்கள் மீது ஆட்சி செலுத்த அவர் எவ்வாறு உரிமையுடையவராவார்? நாங்களோ ஆட்சியதிகாரத்திற்கு அவரைவிட அதிகத் தகுதியுடையோராய் இருக்கின்றோம்; மேலும் அவர் செல்வ வளம் அளிக்கப்பட்டவரும் அல்லவே!” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபி கூறினார்: “உங்களுக்கு மேலாக அல்லாஹ் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும் அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான். தான் நாடுபவர்க்கு தன்னுடைய (பூமியில்) ஆட்சியதிகாரத்தை வழங்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும் அல்லாஹ் மிக விசாலமானவனும் பேரறிவுடையோனாகவும் இருக்கின்றான்.” 2:248 மேலும், அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார்: “அவருடைய ஆட்சி அதிகாரத்திற்கான சான்று (என்ன வென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தில்) உங்களுக்கு ஒரு பேழை திரும்பக் கிடைத்து விடுவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட மன அமைதிக்கான பொருள்களும் மூஸாவுடைய குடும்பத்தினர் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தினர் விட்டுச் சென்ற சிறப்புப் பொருள்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து நிற்கின்றனர். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராக இருந்தால், திண்ணமாக உங்களுக்கு இதில் (மகத்தான) சான்று இருக்கின்றது.”

  அத்தியாயம் 2. அல்பகறா   |  முன்  |     வசனம் 243-248 of 286    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-7
 8-20
 21-29
 30-39
 40-46
 47-59
 60-61
 62-71
 72-82
 83-86
 87-96
 97-103
 104-112
 113-121
 122-129
 130-141
 142-147
 148-151
 152-163
 164-167
 168-176
 177-182
 183-188
 189-196
 197-210
 211-216
 217-221
 222-228
 229-231
 232-235
 236-242
 243-248
 249-253
 254-257
 258-260
 261-266
 267-273
 274-281
 282-283
 284-286