Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 2. அல்பகறா    | முன் |   வசனம்211-216 of 286    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
سَلۡ بَنِىۡٓ اِسۡرَآءِيۡلَ كَمۡ اٰتَيۡنٰهُمۡ مِّنۡ اٰيَةٍۢ بَيِّنَةٍ ؕ وَمَنۡ يُّبَدِّلۡ نِعۡمَةَ اللّٰهِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَاِنَّ اللّٰهَ شَدِيۡدُ الۡعِقَابِ ﴿2:211﴾ زُيِّنَ لِلَّذِيۡنَ كَفَرُوا الۡحَيٰوةُ الدُّنۡيَا وَيَسۡخَرُوۡنَ مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا  ۘ وَالَّذِيۡنَ اتَّقَوۡا فَوۡقَهُمۡ يَوۡمَ الۡقِيٰمَةِ ؕ وَاللّٰهُ يَرۡزُقُ مَنۡ يَّشَآءُ بِغَيۡرِ حِسَابٍ ﴿2:212﴾ كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيۡنَ وَمُنۡذِرِيۡنَ وَاَنۡزَلَ مَعَهُمُ الۡكِتٰبَ بِالۡحَـقِّ لِيَحۡكُمَ بَيۡنَ النَّاسِ فِيۡمَا اخۡتَلَفُوۡا فِيۡهِ ؕ وَمَا اخۡتَلَفَ فِيۡهِ اِلَّا الَّذِيۡنَ اُوۡتُوۡهُ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ الۡبَيِّنٰتُ بَغۡيًا ۢ بَيۡنَهُمۡۚ فَهَدَى اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا لِمَا اخۡتَلَفُوۡا فِيۡهِ مِنَ الۡحَـقِّ بِاِذۡنِهٖ ؕ وَاللّٰهُ يَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ ﴿2:213﴾ اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَـنَّةَ وَ لَمَّا يَاۡتِكُمۡ مَّثَلُ الَّذِيۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِكُمۡؕ مَسَّتۡهُمُ الۡبَاۡسَآءُ وَالضَّرَّآءُ وَزُلۡزِلُوۡا حَتّٰى يَقُوۡلَ الرَّسُوۡلُ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا مَعَهٗ مَتٰى نَصۡرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصۡرَ اللّٰهِ قَرِيۡبٌ ﴿2:214﴾ يَسۡـــَٔلُوۡنَكَ مَاذَا يُنۡفِقُوۡنَ ؕ قُلۡ مَآ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَيۡرٍ فَلِلۡوَالِدَيۡنِ وَالۡاَقۡرَبِيۡنَ وَالۡيَتٰمٰى وَالۡمَسٰكِيۡنِ وَابۡنِ السَّبِيۡلِؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَيۡرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيۡمٌ ﴿2:215﴾ كُتِبَ عَلَيۡکُمُ الۡقِتَالُ وَهُوَ كُرۡهٌ لَّـكُمۡۚ وَعَسٰۤى اَنۡ تَكۡرَهُوۡا شَيۡـــًٔا وَّهُوَ خَيۡرٌ لَّـکُمۡۚ وَعَسٰۤى اَنۡ تُحِبُّوۡا شَيۡـــًٔا وَّهُوَ شَرٌّ لَّـكُمۡؕ وَاللّٰهُ يَعۡلَمُ وَاَنۡـتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿2:216﴾

2:211 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு எத்துணைத் தெளிவான சான்றுகளை நாம் வழங்கியிருக்கின்றோம் என்பதை அவர்களிடமே கேளுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து நற்பேறு வந்த பின்னர் யார் அதனை (துர்பாக்கியத்திற்கு) பரிமாற்றம் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் எத்துணைக் கடுமையாகத் தண்டிக்கின்றான் என்பதையும் அவர்களிடம் கேளுங்கள். 2:212 யார் இறைநிராகரிப்பை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை ஏளனம் செய்கின்றார்கள். ஆனால் இறையச்சத்துடன் வாழ்பவர்கள்தாம் மறுமைநாளில் இவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இவ்வுலக வசதிகளையோ அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றான். 2:213 (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். 2:214 உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.” 2:215 தாம் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக: “நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளையும் செலவு செய்யுங்கள்; (அதனை உங்கள்) பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் செலவழியுங்கள்! மேலும் நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனைத் திண்ணமாக அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.” 2:216 போர் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது; ஆனால் அதுவோ உங்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.

  அத்தியாயம் 2. அல்பகறா   |  முன்  |     வசனம் 211-216 of 286    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-7
 8-20
 21-29
 30-39
 40-46
 47-59
 60-61
 62-71
 72-82
 83-86
 87-96
 97-103
 104-112
 113-121
 122-129
 130-141
 142-147
 148-151
 152-163
 164-167
 168-176
 177-182
 183-188
 189-196
 197-210
 211-216
 217-221
 222-228
 229-231
 232-235
 236-242
 243-248
 249-253
 254-257
 258-260
 261-266
 267-273
 274-281
 282-283
 284-286