Quran in Tamil - Quran Translation - Tafheem ul Quran     

Islamic Foundation Trust - Chennai

  அத்தியாயம் 2. அல்பகறா    | முன் |   வசனம்197-210 of 286    | பா   |     |  எழுத்துரு | இ-மெ 
اَلۡحَجُّ اَشۡهُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِيۡهِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَۙ وَلَا جِدَالَ فِى الۡحَجِّ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَيۡرٍ يَّعۡلَمۡهُ اللّٰهُ ؕ وَتَزَوَّدُوۡا فَاِنَّ خَيۡرَ الزَّادِ التَّقۡوٰى وَاتَّقُوۡنِ يٰٓاُولِى الۡاَلۡبَابِ ﴿2:197﴾ لَيۡسَ عَلَيۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَبۡتَغُوۡا فَضۡلًا مِّنۡ رَّبِّکُمۡؕ فَاِذَآ اَفَضۡتُمۡ مِّنۡ عَرَفٰتٍ فَاذۡکُرُوا اللّٰهَ عِنۡدَ الۡمَشۡعَرِ الۡحَـرَامِ وَاذۡکُرُوۡهُ کَمَا هَدٰٮکُمۡۚ وَاِنۡ کُنۡتُمۡ مِّنۡ قَبۡلِهٖ لَمِنَ الضَّآ لِّيۡنَ ﴿2:198﴾ ثُمَّ اَفِيۡضُوۡا مِنۡ حَيۡثُ اَفَاضَ النَّاسُ وَاسۡتَغۡفِرُوا اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ ﴿2:199﴾  فَاِذَا قَضَيۡتُمۡ مَّنَاسِكَکُمۡ فَاذۡکُرُوا اللّٰهَ كَذِكۡرِكُمۡ اٰبَآءَکُمۡ اَوۡ اَشَدَّ ذِکۡرًا ؕ فَمِنَ النَّاسِ مَنۡ يَّقُوۡلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا وَمَا لَهٗ فِى الۡاٰخِرَةِ مِنۡ خَلَاقٍ ﴿2:200﴾ وَمِنۡهُمۡ مَّنۡ يَّقُوۡلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا حَسَنَةً وَّفِى الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ ﴿2:201﴾ اُولٰٓٮِٕكَ لَهُمۡ نَصِيۡبٌ مِّمَّا كَسَبُوۡا ؕ وَاللّٰهُ سَرِيۡعُ الۡحِسَابِ  ﴿2:202﴾ وَاذۡكُرُوا اللّٰهَ فِىۡٓ اَيَّامٍ مَّعۡدُوۡدٰتٍؕ فَمَنۡ تَعَجَّلَ فِىۡ يَوۡمَيۡنِ فَلَاۤ اِثۡمَ عَلَيۡهِ ۚ وَمَنۡ تَاَخَّرَ فَلَاۤ اِثۡمَ عَلَيۡهِ ۙ لِمَنِ اتَّقٰى ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعۡلَمُوۡٓا اَنَّکُمۡ اِلَيۡهِ تُحۡشَرُوۡنَ ﴿2:203﴾ وَمِنَ النَّاسِ مَنۡ يُّعۡجِبُكَ قَوۡلُهٗ فِى الۡحَيٰوةِ الدُّنۡيَا وَيُشۡهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىۡ قَلۡبِهٖۙ وَهُوَ اَلَدُّ الۡخِصَامِ ﴿2:204﴾ وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الۡاَرۡضِ لِيُفۡسِدَ فِيۡهَا وَيُهۡلِكَ الۡحَـرۡثَ وَالنَّسۡلَؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الۡفَسَادَ ﴿2:205﴾ وَاِذَا قِيۡلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتۡهُ الۡعِزَّةُ بِالۡاِثۡمِ فَحَسۡبُهٗ جَهَنَّمُؕ وَلَبِئۡسَ الۡمِهَادُ ﴿2:206﴾ وَمِنَ النَّاسِ مَنۡ يَّشۡرِىۡ نَفۡسَهُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰهِؕ وَ اللّٰهُ رَءُوۡفٌ ۢ بِالۡعِبَادِ ﴿2:207﴾ يٰٓاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِى السِّلۡمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّيۡطٰنِؕ اِنَّهٗ لَـکُمۡ عَدُوٌّ مُّبِيۡنٌ ﴿2:208﴾ فَاِنۡ زَلَـلۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡکُمُ الۡبَيِّنٰتُ فَاعۡلَمُوۡٓا اَنَّ اللّٰهَ عَزِيۡزٌ حَکِيۡمٌ ﴿2:209﴾ هَلۡ يَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّاۡتِيَهُمُ اللّٰهُ فِىۡ ظُلَلٍ مِّنَ الۡغَمَامِ وَالۡمَلٰٓٮِٕکَةُ وَقُضِىَ الۡاَمۡرُؕ وَاِلَى اللّٰهِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿2:210﴾

2:197 ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மேலும், நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான். மேலும், நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித் துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! 2:198 (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. இன்னும் அரஃபாத்திலிருந்து நீங்கள் திரும்பி வரும்போது, மஷ்அருல் ஹராமில் (முஸ்தலிஃபாவில்) தங்கி அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும் அவன் எவ்வாறு (தன்னை நினைவுகூர வேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னரோ நீங்கள் வழிதவறியவர்களாய் இருந்தீர்கள். 2:199 பின்னர் மற்ற மனிதர்கள் எல்லாரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 2:200 பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவுகூர்ந்தது போல ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மக்களில் (அல்லாஹ்வைப் பல வழிகளில் நினைவுகூருவோர் உளர்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும் இல்லை. 2:201 இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனை யிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர். 2:202 இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு. மேலும் கணக்கு வாங்குவதில் அல்லாஹ் மிக விரைவானவன். 2:203 இன்னும், குறிப்பிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூரல் வேண்டும். பின்னர் எவரேனும் இரண்டே நாட்களில் அவசரமாகத் திரும்பி விட்டால் அவர் மீது குற்றமேதுமில்லை. எவரேனும் சிறிது தாமதித்துப் புறப்பட்டால் அவர் மீதும் குற்றமில்லை. ஆனால் (ஒரு நிபந்தனை:) அவர் இந்த நாளை இறையச்சத்துடன் கழித்திருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! மேலும் (ஒரு நாள்) நீங்கள் அவனுடைய திருமுன்னர்தான் ஒன்று திரட்டப்பட விருக்கின்றீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்! 2:204 மனிதர்களில் இப்படி ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய பேச்சு இவ்வுலக வாழ்க்கையில் உமக்கு கவர்ச்சியாகத் தென்படுகிறது. மேலும், அவன் தன் மனத்தில் உள்ளவை தூய்மையானவை என (நிரூபிக்க அடிக்கடி) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றான். ஆனால் உண்மையில் அவனே (சத்தியத்தின்) கொடிய பகைவன் ஆவான். 2:205 அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை. 2: 206 மேலும் “நீ அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்திடு!” என்று அவனிடம் கூறப்பட்டால், அவனது வறட்டு கௌரவம் அவனைப் பாவத்திலாழ்த்தி விடுகின்றது. இத்தகைய மனிதனுக்கு நரகமே போதுமானதாகும். மேலும் அது மிக மோசமான தங்குமிடமாகும். 2:207 மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்: அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி தன் வாழ்வையே அர்ப்பணித்துவிடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகுந்த பரிவுடையவனாய் இருக்கின்றான். 2:208 இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள்! மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான்; 2:209 (முழுக்க முழுக்கத்) தெளிவான அறிவுரைகள் உங்களுக்கு வந்த பின்னரும் நீங்கள் வழி பிறழ்ந்து போவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையோன்; நுண்ணறிவுள்ளோன் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். 2:210 (இவ்வளவு அறிவுரைகளும், ஏவுரைகளும் பெற்ற பின்னரும் கூட மக்கள் நேர்வழியில் செல்லவில்லையென்றால்) மேகக் குடைகளினூடே இறைவனும் வானவர்களும் தங்களிடம் வரவேண்டும்; மேலும் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்பதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? இறுதியில் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடமே கொண்டுவரப்பட விருக்கின்றன.

  அத்தியாயம் 2. அல்பகறா   |  முன்  |     வசனம் 197-210 of 286    |  பா    |  இ-மெயில்

       
 About

Close X 

 
 1. அல்ஃபாத்திஹா
 2. அல்பகறா
 3. ஆலுஇம்ரான்
 4. அன்னிஸா
 5. அல்மாயிதா
 6. அல்அன்ஆம்
 7. அல்அஃராஃப்
 8. அல்அன்ஃபால்
 9. அத்தவ்பா
 10. யூனுஸ்
 11. ஹூத்
 12. யூஸஃப்
 13. அர்ரஃத்
 14. இப்ராஹீம்
 15. அல்ஹிஜ்ர்
 16. அந்நஹ்ல்
 17. பனூ இஸ்ராயீல்
 18. அல் கஹ்ஃபு
 19. மர்யம்
 20. தாஹா
 21. அல் அன்பியா
 22. அல்ஹஜ்
 23. அல்முஃமினூன்
 24. அந்நூர்
 25. அல் ஃபுர்கான்
 26. அஷ்ஷூஅரா
 27. அந்நம்ல்
 28. அல்கஸஸ்
 29. அல்அன்கபூத்
 30. அர் ரூம்
 31. லுக்மான்
 32. அஸ்ஸஜ்தா
 33. அல்அஹ்ஸாப்
 34. ஸபா
 35. ஃபாத்திர்
 36. யாஸீன்
 37. அஸ்ஸாஃப்ஃபாத்
 38. ஸாத்
 39. அஸ்ஸூமர்
 40. அல்முஃமின்
 41. ஹாமீம் ஸஜ்தா
 42. அஷ்ஷூறா
 43. அஸ்ஸூக்ருஃப்
 44. அத்துகான்
 45. அல் ஜாஸியா
 46. அல்அஹ்காஃப்
 47. முஹம்மத்
 48. அல் ஃபத்ஹ்
 49. அல்ஹுஜுராத்
 50. காஃப்
 51. அஸ்ஸாரியாத்
 52. அத்தூர்
 53. அந்நஜ்ம்
 54. அல்கமர்
 55. அர்ரஹ்மான்
 56. அல்வாகிஆ
 57. அல்ஹதீத்
 58. அல்முஜாதலா
 59. அல்ஹஷ்ர்
 60. அல்மும்தஹினா
 61. அஸ்ஸஃப்
 62. அல்ஜுமுஆ
 63. அல்முனாஃபிஃகூன்
 64. அத்தகாபுன்
 65. அத்தலாஃக்
 66. அத்தஹ்ரீம்
 67. அல்முல்க்
 68. அல்கலம்
 69. அல்ஹாக்கா
 70. அல்மஆரிஜ்
 71. நூஹ்
 72. அல்ஜின்னு
 73. அல்முஸ்ஸம்மில்
 74. அல்முத்தஸ்ஸிர்
 75. அல்கியாமா
 76. அத்தஹ்ர்
 77. அல்முர்ஸலாத்
 78. அந்நபா
 79. அந்நாஸிஆத்
 80. அபஸ
 81. அத்தக்வீர்
 82. அல்இன்ஃபிதார்
 83. அல்முத்தஃப்ஃபிஃபீன்
 84. அல்இன்ஷிகாக்
 85. அல்புரூஜ்
 86. அத்தாரிக்
 87. அல்அஃலா
 88. அல்காஷியா
 89. அல்ஃபஜ்ர்
 90. அல்பலத்
 91. அஷ்ஷம்ஸ்
 92. அல்லைல்
 93. அள்ளுஹா
 94. அலம் நஷ்ரஹ்
 95. அத்தீன்
 96. அல்அலக்
 97. அல்கத்ர்
 98. அல்பய்யினா
 99. அஸ்ஸில்ஸால்
 100. அல்ஆதியாத்
 101. அல்காரிஆ
 102. அத்தகாஸுர்
 103. அல்அஸ்ர்
 104. அல்ஹுமஸா
 105. அல்ஃபீல்
 106. குறைஷ்
 107. அல்மாஊன்
 108. அல்கவ்ஸர்
 109. அல்காஃபிரூன்
 110. அந் நஸ்ர்
 111. அல்லஹப்
 112. அல்இக்லாஸ்
 113. அல்ஃபலக்
 114. அந்நாஸ்
 Complete
 1-7
 8-20
 21-29
 30-39
 40-46
 47-59
 60-61
 62-71
 72-82
 83-86
 87-96
 97-103
 104-112
 113-121
 122-129
 130-141
 142-147
 148-151
 152-163
 164-167
 168-176
 177-182
 183-188
 189-196
 197-210
 211-216
 217-221
 222-228
 229-231
 232-235
 236-242
 243-248
 249-253
 254-257
 258-260
 261-266
 267-273
 274-281
 282-283
 284-286