மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள் (நாடக வடிவில்)

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள் (நாடக வடிவில்)

பொதுவாக ‘சீறத்’ என்று சொல்லப்படும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படிப்பவர்கள் பல செய்திகளை மேலோட்டமாக அறிந்திருப்பார்கள். நபிகளார் பிறந்தது, வளர்ந்தது, திருமணம் முடித்தது, இறைத்தூதர் ஆனது, வேதம் அருளப்பட்டது, மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது, போர்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கை, மக்கா வெற்றி, மரணம் என்றெல்லாம் படித்திருப்பார்கள். நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அனைத்திலும் மேற்கண்ட தகவல்கள் சற்று கூடுதலாகவோ குறைவாகவோ இடம் பெற்றிருக்கும்.

ஆனால் அண்மைக் காலமாக நபிகளாரின் தூய வரலாற்றை நுணுகி ஆராய்ந்து துறை சார்ந்த நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆம்..! பொதுவான சீறத் நூல்கள் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அதாவது, நபிகளாரும் வணிகமும், நபிகளாரும் போர்களும், நபிகளாரின் குடும்ப வாழ்க்கை, இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் (இறைத்தூதரின் மனைவியர்), அண்ணலார் கண் கலங்கிய தருணங்கள், அண்ணலாரின் நகைச்சுவை, நபிகளார் கற்பித்த இங்கிதங்கள் என்றெல்லாம் சீறத் நூல்கள் தனித்தனித் தலைப்புகளில் வரத்தொடங்கியுள்ளன.

அந்த வகையில் வெளியாகியுள்ள புதிய நூல்தான் உங்கள் கைகளில் தவழும் ‘மன்னர்களுக்கு மாநபி எழுதிய மடல்கள்’ எனும் நூல். சீறத் நூல்களைப் படிக்கும்போது பல்வேறு மன்னர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதங்கள் அனுப்பினார் என்று படிக்கிறோம். ஆனால் எந்தெந்த மன்னர்களுக்குக் கடிதங்கள் அனுப்பினார், அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள், அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதெல்லாம் பலருக்கும் தெரியாது.

அந்தச் செய்திகளை எல்லாம் தொகுத்து ஒரே நூலாக, அதுவும் விறுவிறுப்பாகப் படிப்பதற்கு ஏற்ற வகையில் நாடக வடிவில் ஆக்கித் தந்துள்ளார் மௌலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாகவி அவர்கள். மௌலவி அவர்கள் நல்ல பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். பன்னூலாசிரியர். தமிழ், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளையும் ஆளத்தெரிந்தவர். அதனால்தான் இந்த மடல்களின் வரலாற்றைச் சுவையான நாடக வடிவில் ஆக்கித்தர அவரால் முடிந்திருக்கிறது.

மாநபி(ஸல்)அவர்கள் மன்னர்களுக்கு எழுதிய கடிதங்கள் பற்றிய நூல்தான் என்றாலும் வரலாற்று நோக்கிலும் அழைப்பியல் கோணத்திலும் பெரும் பயன் விளைவிக்கும் சிறந்த நூலாகும் இது.

ஆசிரியர்: மெளலவி K.J. மஸ்தான் அலி பாகவி உமரி

ISBN: 9788123202709

Quantity

Price: INR 90.00

Loading Updating cart...