இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

ஒரு முஸ்லிமல்லாத நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும்?

அவர்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள்தாம் என்ன?

முஸ்லிமல்லாதாருடன் அவர்களின் தொடர்பும் உறவும் எத்தகையதாய் இருக்க வேண்டும்? அவர்கள் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

கொடுமைக்காளாகும்போது எப்படி எதிர்வினையாற்ற வேண்டும்? தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்கள் செய்ய வேண்டியதென்ன?

முஸ்லிமல்லாத நாட்டில் தனிமனிதர்களின் உரிமைகளும் சமூகக் குழுக்களின் உரிமைகளும் மீறப்படும்போதும் நசுக்கப்படும்போதும் அந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அணுகுமுறையும் நடத்தையும் எதிர்வினையும் எத்தகையதாக இருக்கும்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்து நிற்பதா? பக்கச்சார்பின்றி ஒதுங்கி நிற்பதா?

இவை போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்த நூல்.

இந்தத் தலைப்பில் முன்னோடி நூல் இது. காலத்தின் கட்டாயமாகவும் இதனைச் சொல்லலாம்.

ஆசிரியர்: மெளலனா சைய்யத் ஜலாலுத்தீன் உமரி

ISBN:  9788123202679

Quantity

Price: INR 60.00

Loading Updating cart...