Syed Abul Ala Moududi

Pages: 1 2Next >Last »

இஸ்லாம் வழங்கும் தூது

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், அவற்றிற்கிணங்க உருவாகும் வாழ்க்கை நெறியையும் Read the rest of this entry »

Price: INR 15.00

Loading Updating cart…

இஸ்லாத்தில் மனித உரிமைகள்

மனித உரிமைகளின் அடிப்படைக் கருத்தோட்டம் என்ன, அதனை நிலைநாட்டும் வழிமுறைகள் என்ன என்பன Read the rest of this entry »

Price: INR 30.00

Loading Updating cart…

ஒழுக்க மாளிகை

படைப்பாளனின் அதிகாரத்தை ஏற்று அவனது ஆணை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டுமே ஒழுக்கரீ Read the rest of this entry »

Price: INR 15.00

Loading Updating cart…
Loading Updating cart…

தீனை நிலைநாட்டுங்கள்

தீன் என்றால் என்ன? தீன் வேறு; ஷரீஅத் வேறா? தீனை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அண்ணல் Read the rest of this entry »

Price: INR 50.00

Loading Updating cart…

அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்

உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை எற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்…!

– மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

Price: INR 150.00

Loading Updating cart…

அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான் – தஃப்ஹீமுல் குர்ஆன்

உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை எற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்…!

மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

Price: INR 100.00

Loading Updating cart…

மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) – வின் ஒலி நூல்கள்

மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) – வின் ஒலி நூல்கள்

அவர்களின் தூய இஸ்லாமிய சிந்தனைகள் உள்ளடங்கிய
பின்வரும் நூல்கள் தமிழில் ஒலி வடிவில்

1. முஸ்லிமின் அடிப்படை கடமை
2. இதுதான் இஸ்லாம்
3. இஸ்லாமிய வாழ்வு (குத்பாத்)
4. சாந்திக்கு வழி
5. வரலாற்றில் ஓர் திருப்பம்
6. தொண்டு சிறக்க
7. இயக்கம் வெற்றி பெற
8. மரணத்திற்கு பின்

Price: INR 50.00

Loading Updating cart…

அத்தியாயம் 13: அர்ரஃத் – அத்தியாயம் 14: இப்ராஹீம் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை.

ஆசிரியர் : மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமிழில்: அப்ஜலுல் உலமா, மௌலவி M.I. முஹம்மது சித்தீக் உமரி, மதனி, M.A., M.Com. மனித குல வரலாற்றில் எத்தனையோ மதங்கள், பண்பாடுகள், நாகரிகங்கள் தோன்றி முத்திரை பதித்திருக்கின்றன; எழுச்சிக் காவியங்களை எழுதியிருக்கின்றன. காலப்போக்கில் சறுக்கி விழுந்து தொலைந்து அழிந்து சுவடுகள் கூட இல்லாமல் போய் இருக்கின்றன. ஆனால் பண்பாடுகளின் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் மார்க்கத்தைக் கட்டமைத்த, பண்பாட்டைப் பண்படுத்திய, நாகரிகத்தை செதுக்கியமைத்த, சமூகத்தை வார்த்தெடுத்த ஒற்றை நூல் ஒன்று உண்டு என்றால் அது குர்ஆன் மட்டுமே! குர்ஆனுக்கு மட்டும்தான் அந்தச் சிறப்பு! குர்ஆனைப் புரிந்து கொள்வதற்காக, அது முன் வைக்கின்ற அழைப்பை விளங்கிக் கொள்வதற்காக காலம்தோறும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவை காலத்தை வென்று நிற்கின்றன. இந்தத் தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் எழுதிய தஃப்ஹீமுல் குர்ஆன் குறிப்பிடத்தக்கது. தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரையை எழுதிய மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் தற்கால இஸ்லாமிய எழுச்சியின் முதன்மைச் சிற்பியாக, இயக்கத் தலைவராக, சிந்தனையாளராக முத்திரை பதித்து நிற்கின்றார். குர்ஆன் விரிவுரை இலக்கியங்களில் தஃப்ஹீமுல் குர்ஆனுக்குத் தனி இடம் உண்டு. நவீனத்துவம், பாரம்பர்யம் போன்ற அளவுகோல்களைக் கொண்டு அதனை மதிப்பிடுவதும் சிரமமானதே! மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற புரட்சிகரமான நூல் என்று அதனைச் சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆம். உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! உலகாயதச் சிந்தனைகளும், மேற்கத்திய இறைமறுப்புக் கோட்பாடுகளும் மனித மனங்களைச் சிதைத்து வந்த காலகட்டத்தில் மீண்டும் மக்களை இறைவாக்கின் பக்கம் மீளச் செய்த குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! இன்று உலகெங்கும் மிக அதிகமாக வாசிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! அரபி, ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜராத்தி, சிங்களம், துருக்கி, தெலுங்கு, பார்ஸி, புஷ்து, மலையாளம், ஜெர்மன் என ஏராளமான மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சிறப்புமிக்க தஃப்ஹீமுல் குர்ஆன் தமிழிலும் மொழிபெயர்ப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சமர்ப்பிக்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்! இந்த அறப்பணியின் தொடக்கமாக அல் ஃபாத்திஹா, அல் கஹ்ஃபு ஆகிய இரண்டு அத்தியாயங்களின் விளக்கவுரை 2008 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரைகள் முறையே 2009 ஜனவரி, ஜூலை மாதங்களில் வெளியாயின. அதன் தொடர்ச்சியாக ‘அல் அஃராஃப், அத்தியாயம் 13: அர்ரஃத் – அத்தியாயம் 14: இப்ராஹீம் ’ அத்தியாயத்தின் விளக்கவுரை இப்போது உங்கள் கைகளில்! இனி வருங்காலங்களில் பிற அத்தியாயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ்! இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத் தலைவிகள், ஆலிம்கள் என எல்லாருடைய கைகளிலும் இந்த நூல் தவழ வேண்டும் என்பது எங்கள் பேரவா! வாசியுங்கள்! மற்றவர்களுக்கும் வாசிக்கக் கொடுங்கள்! எண்ணங்கள் ஈடேற இறையருள் துணை நிற்கட்டும்!

Price: INR 130.00

Loading Updating cart…

அத்தியாயம் 4 : அன்னிஸா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை

அத்தியாயம் ‘அன்னிஸா’ மனித இனத்திற்கு, பல சட்டங்களையும் ஒழுக்கங்களையும் விளக்கும் நிரந்தர சட்டமாக அமைந்திருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தைக் கட்டுக்கோப்புடன் செழித்தோங்கச் செய்வது எப்படி, இஸ்லாத்துக்கு முந்தைய அறியாமை வழிமுறை-களை-யெல்லாம் முழுக்க ஒழித்து விட்டு ஒழுக்கம், பண்பாடு, சமூகவியல், பொருளியல் போன்றவற்றுக்கான புதிய கொள்கைகளையும் வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவது எப்படி போன்ற வினாக்களுக்கு விளக்கங்களைத் தந்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கவுரை அமைந்துள்ளது.
மேலும், ‘அன்னிஸா’ அத்தியாயம் முக்கியமான அம்சங்-களான அநாதைகள் பராமரிப்பு, அவர்களின் சொத்துப் பாதுகாப்பு, பலதாரமணம், பெண்களின் சொத்துரிமை, இல்லறத்தில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், பெண்-களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள், உறவினரை அரவணைத்துச் செல்லல், பாகப்பிரிவினைச் சட்டங்கள், நேர்மையான வருமானம், நாணயமான வணிகம், சிறிய பெரிய பாவங்கள்  அவற்றின் தீர்வுகள், பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் போன்றவற்றை விரிவாகக் கூறுகின்றது.
இன்னும், அரபு இணை வைப்பாளர்கள், யூதக் குலத்த-வர்கள், நயவஞ்சகர்கள் போன்றவர்களின் தீவிர எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த எதிர்ப்புச் சக்திகளின் பகைமையையும் மீறி இஸ்லாத்தின் அழைப்பைப் பரப்புவது, புதிய நல்லுள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பது எப்படி என்பதை உணர்த்துவதாகவும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அனைத்து விவரங்களையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த விளக்கவுரை அமைந்திருக்-கின்றது. இவ்வுலகில் இன்ப வாழ்வை அனுபவித்து மறுமை-யில் வெற்றியைப் பெற விரும்புவோர் ஒரு முறைக்குப் பலமுறை படித்துச் சிந்தித்து செயற்புரிய இந்த ‘அன்னிஸா’ அத்தியாயமும் விளக்கவுரையும் உதவும் என்று நம்புகிறோம்.

Price: INR 200.00

Loading Updating cart…

அத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை

‘தா-ஸீம்-மீம். இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்’ எனத் தொடங்கும் ‘அல் கஸஸ்’ எனும் 28ஆவது அத்தியாயம்  இறைத்தூதர் நபி மூஸா (அலை) வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளின் வரலாற்றுத் தொகுப்பாய்த் திகழ்கிறது. மூஸா நபியின் ஆரம்ப காலகட்டம், திருமணம் என்று பல செய்திகளைத் தெரிவிப்பதாக இருக்கிறது. இதற்குரிய விளக்கங்கள் நபி மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கின்றது. இன்னும், ஃபிர்அவ்னுக்கும் மூஸா நபி (அலை) அவர்களுக்கும் இடையில் மூண்டிருந்த மோதலைப் போன்றே மக்காவிலும் நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கத்து இறைமறுப்பாளர்களுக்கும் இடையிலும் மோதல் மூண்டு இருந்தது என்பதைக் குறிப்பிடும் வசனங்களுக்கான விளக்கங்களும் தெளிவான புரிதலைத் தருகின்றன.
85ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான்’ என்பதற்கு வழங்கப்படும் தவறான விளக்கங்களைப் பின்தள்ளி சரியான கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ‘இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப் பட்டிருக்கின்றது)’ என்ற வசனத்திற்கான மிக நீண்ட விளக்கம் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவப் பொறுப்புடன் இணைத்து இங்கு விளக்கப்படுகிறது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவப் பொறுப்பின் வலிமை, தாக்கம் இவற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Price: INR 130.00

Loading Updating cart…

அத்தியாயம் 21 : அல் அன்பியா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை

எச்சரிக்கையூட்டும் வசனங்களுடன் ஆரம்பமாகின்றது அத்தியாயம் அல்அன்பியா. தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்து வந்த தூதுத்துவம் மற்றும் மறுமை வாதங்களை விளக்குகின்ற வசனங்கள் அமைந்துள்ளன. இவைகளின் விரிவுரைகளையும் இதில் காணலாம். இன்னும், இறைத்தூதர்களின் அழகிய வரலாறுகளிலிருந்து முக்கியமான நிகழ்வுகள் வசனங்களில் கோர்த்து தரப்பட்டுள்ளன. இறைத்தூதர்களும் மனிதர்களே, அவர்களுக்கு இறைமைப் பண்போ, இறையாண்மையோ இம்மியளவும் இல்லை. அவர்களின் தேவைகளுக்கும் அல்லாஹ்விடமே கையேந்துபவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர்கள்மீது பல்வேறு பேரிடர்கள் வந்த பொழுது இறைவன் தரப்பில் இருந்து பேருதவி அளிக்கப்பட்டன. எல்லா இறைத்தூதர்களின் மார்க்கமும் நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த மார்க்கமும் ஒன்றுதான். மனிதகுலத்தின் உண்மையான மார்க்கமும் அதுதான் என்ற கருத்துக்களை விளக்கும் வசனங்களுக்கும் அழகான விரிவுரைகளை பார்க்கலாம்.
அத்தியாயத்தின் முத்தாய்ப்பாக நபிகளார் (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதில்தான் மனிதனுக்கு நன்மை இருக்கிறது. மறுமையில் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்பதை உணர்த்தி முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வருகை உலக மக்களுக்கு இறைவனின் தனிப்பெரும் அருளாகவும் கருணையாகவும்தாம் இருக்கின்றது என்று முடியும் வசனங்களுக்கும் சிறப்பான விரிவுரைகளை காணலாம்.

Price: INR 100.00

Loading Updating cart…

அத்தியாயம் 27 : அந்நம்ல் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை

‘அந்நம்ல்’ அத்தியாயத்தின் தொடக்கத்தில் குர்ஆன் எடுத்துரைக்கின்ற அடிப்படை பேருண்மைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொண்ட பிறகு தம்முடைய வாழ்வில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழத் தொடங்கிவிடுவது என்ற தன்மைகள் இருந்தாக வேண்டும் என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
மேலும், ஃபிர்அவ்ன், ஸமூத் சமூகத் தலைவர்கள், லூத் சமூகத்துக் கலகக்காரர்கள் இவர்களின் இறைமறுப்பு, மன இச்சைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்த நிலை, அதன்பிறகு ஸுலைமான் (அலை) அவர்கள் எந்நேரமும் அல்லாஹ்வுக்கு முன் சிரம்பணிந்த நிலை, ஸபஃ நாட்டு அரசியின் செல்வச்செழிப்பு, அதனால் ஏற்பட்ட ஆணவம், கர்வம், சத்தியம் தெளிவாகப் புலப்பட்டதும் செருக்கில்லாமல் அதனை ஏற்றுக்கொண்ட நிலை தொடர்பான வசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள் முழுமையாகப் புரிந்துக்கொள்ளும்படி அமைந்துள்ளன.
மக்கத்து இறைமறுப்பாளர்களிடம் வெளிப்படையாகத் தெரிகின்ற பேரண்டத்தின் உண்மைகள், ஏகத்துவ அழைப்புக்குச் சான்றுகளாய் இருக்கின்றனவா என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. மறுமையை ஏற்க மறுத்ததால்தான் அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் இருக்கின்றார்கள் என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. இவைகளைச் சுட்டிக்காட்டிய பிறகு மக்களின் மனங்களில் மறுமைச் சிந்தனையை நினைவூட்டும் விதத்திலும் அலட்சியப்போக்கில் இருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கையூட்டும் விதத்திலும் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அத்தியாயத்தின் இறுதியில் குர்ஆனின் உண்மையான அழைப்பு – ஏக இறைவனை அடிபணிந்தும் கீழ்ப்படிந்தும் வாழ்வதற்கான அழைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைக்கப்பட்டு இதனை ஏற்றுக்கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும், நிராகரித்தால் உங்களுக்கு துன்பம்தான் உண்டாகும் என்று திட்டவட்டமாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Price: INR 130.00

Loading Updating cart…

திருக்குர்ஆன் விளக்கவுரை – ஹுத், யூனுஸ்

உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்-பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! உலகாயதச் சிந்தனைகளும், மேற்-கத்திய இறைமறுப்புக் கோட்பாடுகளும் மனித மனங்களைச் சிதைத்து வந்த காலகட்-டத்தில் மீண்டும் மக்களை இறைவாக்கின் பக்கம் மீளச் செய்த குர்ஆன் விரிவுரைதான் தஃப்-ஹீமுல் குர்ஆன்..! இன்று உலகெங்கும் மிக அதிகமாக வாசிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! அரபி, ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜ-ராத்தி, சிங்களம், துருக்கி, தெலுங்கு, பார்ஸி, புஷ்து, மலையாளம், ஜெர்மன் மற்றும் பல மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்-கப்-பட்டிருக்கின்றது. இதற்கு முன் அல்ஃபாத்திஹா, அல்பகறா, ஆலுஇம்ரான்” ஆகிய அத்தியாயங்கள் அடங்கிய முதல் தொகுதியும், அல்கஹ்ஃபு, மர்யம், தாஹா, அல்அஃராஃப், அல்அன்ஃபால், அத்தவ்பா” அத்தியாயங்களின் விளக்கவுரை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யூனுஸ், ஹூத்” அத்தியாயங்களின் விளக்கவுரை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், இனி வருங்காலங்களில் பிற அத்தியாயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். வாசியுங்கள்! மற்றவர்களுக்-கும் வாசிக்கக் கொடுங்கள்!

Price: INR 150.00

Loading Updating cart…
Pages: 1 2Next >Last »