அத்தியாயம் 27 : அந்நம்ல் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை (Duplicate)

Welcome to IFT-Chennai.org » Products Page » New Release » அத்தியாயம் 27 : அந்நம்ல் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை (Duplicate)

‘அந்நம்ல்’ அத்தியாயத்தின் தொடக்கத்தில் குர்ஆன் எடுத்துரைக்கின்ற அடிப்படை பேருண்மைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொண்ட பிறகு தம்முடைய வாழ்வில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழத் தொடங்கிவிடுவது என்ற தன்மைகள் இருந்தாக வேண்டும் என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
மேலும், ஃபிர்அவ்ன், ஸமூத் சமூகத் தலைவர்கள், லூத் சமூகத்துக் கலகக்காரர்கள் இவர்களின் இறைமறுப்பு, மன இச்சைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்த நிலை, அதன்பிறகு ஸுலைமான் (அலை) அவர்கள் எந்நேரமும் அல்லாஹ்வுக்கு முன் சிரம்பணிந்த நிலை, ஸபஃ நாட்டு அரசியின் செல்வச்செழிப்பு, அதனால் ஏற்பட்ட ஆணவம், கர்வம், சத்தியம் தெளிவாகப் புலப்பட்டதும் செருக்கில்லாமல் அதனை ஏற்றுக்கொண்ட நிலை தொடர்பான வசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள் முழுமையாகப் புரிந்துக்கொள்ளும்படி அமைந்துள்ளன.
மக்கத்து இறைமறுப்பாளர்களிடம் வெளிப்படையாகத் தெரிகின்ற பேரண்டத்தின் உண்மைகள், ஏகத்துவ அழைப்புக்குச் சான்றுகளாய் இருக்கின்றனவா என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. மறுமையை ஏற்க மறுத்ததால்தான் அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் இருக்கின்றார்கள் என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. இவைகளைச் சுட்டிக்காட்டிய பிறகு மக்களின் மனங்களில் மறுமைச் சிந்தனையை நினைவூட்டும் விதத்திலும் அலட்சியப்போக்கில் இருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கையூட்டும் விதத்திலும் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அத்தியாயத்தின் இறுதியில் குர்ஆனின் உண்மையான அழைப்பு – ஏக இறைவனை அடிபணிந்தும் கீழ்ப்படிந்தும் வாழ்வதற்கான அழைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைக்கப்பட்டு இதனை ஏற்றுக்கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும், நிராகரித்தால் உங்களுக்கு துன்பம்தான் உண்டாகும் என்று திட்டவட்டமாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Quantity

Price: INR 130.00

Loading Updating cart...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *