இதயம் திருந்த இனிய மருந்து

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » அழைப்பியல் » இதயம் திருந்த இனிய மருந்து

 ஆசிரியர்: சிராஜுல் ஹஸன்

“மனிதர்களிடம் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது திருந்திவிட்டால் எல்லாமே சீர்திருந்திவிடும்; அது சீர்குலைந்து விட்டால் எல்லாமே சீர்குலைந்துவிடும்- அதுதான் இதயம்” என்று கூறினார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்.

இறைத்தூதர்கள் இந்த உலகிற்கு அனுப்பப்பட்ட முதன்மை நோக்கங்களில் ஒன்று, மனித இதயங்களில் படிந்துள்ள நோய்களை அகற்றி, அந்த இதயங்களை இறைவனுக்கு அடிபணிந்தவையாய் மாற்றிட வேண்டும் என்பதும் ஆகும்.

குறிப்பாக, அகிலத்திற்கு எல்லாம் ஓர் அருட்கொடையாக வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதயங்களைச் சீரமைக்கும் பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவருடைய எந்த ஓர் அறிவுரையை, வழிகாட்டலை எடுத்துப் பார்த்தாலும் இந்தச் சீர்திருத்த நோக்கம் எடுப்பாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்தச் சிறிய நூலிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் ‘தினமணி’ நாளிதழின் இணைப்பான வெள்ளிமணியில் வெளியான கட்டுரைகள் ஆகும். முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை- இறைமார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துரைக்கும் நோக்கில் மிக மிக எளிமையாக எழுதப்பட்ட ஆக்கங்கள் ஆகும் இவை.

‘தினமணி’யில் இவை வெளியானபோது ஏராளமான வாசகர்கள்- குறிப்பாக சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் இந்தக் கட்டுரைகள் மூலம் பெரிதும் பயன்பெற்றார்கள். இஸ்லாம் வலியுறுத்தும் ஓரிறைக் கொள்கை, ரமளான் மாதத்தின் சிறப்பு, நோன்பு, மறுமை போன்றவற்றையும், பெற்றோரை மதித்தல், நட்பு, கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறை-களையும் குர்ஆன்- ஹதீஸ் ஒளியில் மனதில் பதியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது.

கட்டுரைகள் அனைத்திலும் காணப்படும் ஓர் அறிவுப்-பூர்வமான அணுகுமுறையும், அதே சமயம் இதயத்தைத் தொடும் மொழிநடையும் நிச்சயம் உங்களைக் கவர்ந்திழுக்கும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்துமுடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள்.

இந்த நூல் முஸ்லிம்களிடம் மட்டுமின்றி, முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் பெருமளவில் சென்று சேர வேண்டும்; அதன் மூலம் அவர்கள் இறைமார்க்கம் பற்றி அறிந்துகொள்வதுடன் இறைவனின் இந்தத் தூய திருநெறி எல்லாருக்கும் உரியது என்பதை உய்த்தறியவேண்டும் என்பதே எங்களின் வேணவா

ISBN 978-81-232-0263-1

Quantity

Price: INR 40.00

Loading Updating cart...